4 புனித நாரிழை அங்கியை+ அவன் போட்டுக்கொள்ள வேண்டும். நாரிழையால் செய்த அரைக் கால்சட்டையை+ உள்ளாடையாக உடுத்திக்கொள்ள வேண்டும். நாரிழையாலான இடுப்புக்கச்சையையும்+ தலைப்பாகையையும்+ போட்டுக்கொள்ள வேண்டும், அவை பரிசுத்த உடைகள்.+ அவன் குளித்துவிட்டு+ அவற்றைப் போட்டுக்கொள்ள வேண்டும்.