21 அந்த வெள்ளாட்டின் மேல் தன் இரண்டு கைகளையும் வைத்து இஸ்ரவேலர்கள் செய்த எல்லா குற்றங்களையும் தவறுகளையும் பாவங்களையும் ஒத்துக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் அந்த வெள்ளாட்டின் தலையில் சுமத்த வேண்டும்.+ பின்பு, அதை வனாந்தரத்தில் விடுவதற்கு நியமிக்கப்பட்டவரிடம் அதைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும்.