23 ஆனாலும், அவனுக்குக் குறைபாடு இருப்பதால் அவன் திரைச்சீலைக்குப்+ பக்கத்தில் போகக் கூடாது, பலிபீடத்துக்கும்+ போகக் கூடாது. அவன் என்னுடைய வழிபாட்டுக் கூடாரத்தைக்+ களங்கப்படுத்தக் கூடாது. ஏனென்றால், நான் அவர்களைப் புனிதப்படுத்துகிறேன். நான் யெகோவா’”+ என்றார்.