13 ஆனால் ஒருவன் பிணத்தினால் தீட்டுப்படாமலோ, நீண்டதூரப் பயணம் போகாமலோ இருந்தும் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடாமல் அதை அலட்சியப்படுத்தினால், அவன் கொல்லப்பட வேண்டும்.+ ஏனென்றால், யெகோவாவின் பண்டிகையை அதற்கான நாளில் அவன் கொண்டாடவில்லை. அந்தப் பாவத்துக்காக அவன் தண்டிக்கப்படுவான்.