18 அதன்பின், தீட்டில்லாத ஒருவர்+ மருவுக்கொத்தை+ எடுத்து, அந்தத் தண்ணீரில் முக்கி, கூடாரத்தின்மேலும் எல்லா பாத்திரங்களின்மேலும் அங்கு இருந்தவர்களின்மேலும் தெளிக்க வேண்டும். அதேபோல், கொல்லப்பட்டவனையோ வேறு விதத்தில் செத்தவனையோ எலும்பையோ கல்லறையையோ தொட்டவன்மேலும் தெளிக்க வேண்டும்.