19 தீட்டில்லாதவர் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் அதைத் தெளிக்க வேண்டும். ஏழாம் நாளில் அவனைப் பாவத்திலிருந்து சுத்திகரிக்க வேண்டும்.+ அதன்பின், சுத்திகரிக்கப்படுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். சாயங்காலத்தில் அவன் சுத்தமாவான்.