23 ஆனால், சீகோன் தன்னுடைய தேசத்தின் வழியாகப் போக இஸ்ரவேலர்களை அனுமதிக்கவில்லை. அவன் தன்னுடைய ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலர்களுக்கு எதிராக வனாந்தரத்திலே போர் செய்யக் கிளம்பினான். அவன் யாகாசுக்குப் போய், அங்கே இஸ்ரவேலர்களோடு போர் செய்தான்.+