17 நான் அவரைப் பார்ப்பேன், ஆனால் இப்போது அல்ல.
நான் அவரைப் பார்ப்பேன், ஆனால் சீக்கிரத்தில் அல்ல.
யாக்கோபிடமிருந்து ஒரு நட்சத்திரம்+ உதிக்கும்.
இஸ்ரவேலிடமிருந்து+ ஒரு செங்கோல்+ எழும்பும்.
மோவாபின் நெற்றிப்பொட்டில் அவர் கண்டிப்பாகத் தாக்குவார்.+
வெறிபிடித்த ஜனங்களின் மண்டையோட்டை நிச்சயமாக உடைப்பார்.