7 உங்கள் கடவுளாகிய யெகோவா நீங்கள் செய்த எல்லாவற்றையும் ஆசீர்வதித்திருக்கிறார். இவ்வளவு பெரிய வனாந்தரத்தில் நீங்கள் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியையும் அவர் பார்த்திருக்கிறார். இந்த 40 வருஷங்களாக உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு இருந்திருக்கிறார், உங்களுக்கு ஒரு குறையும் இருந்ததில்லை”’+ என்று சொன்னார்.