21 அவர்கள் ஏனாக்கியர்களைப் போல் ஏராளமாக இருந்தார்கள். அவர்களைப் போலவே பலசாலிகளாகவும், உயரமானவர்களாகவும் இருந்தார்கள்.+ ஆனால், அம்மோனியர்களைப் பயன்படுத்தி யெகோவா அவர்களை அழித்தார். அம்மோனியர்கள் அவர்களை ஒழித்துக்கட்டிவிட்டு அவர்களுடைய தேசத்தில் குடியேறினார்கள்.