15 இறைச்சி சாப்பிட வேண்டுமென்று எப்போது ஆசைப்பட்டாலும் அதைச் சாப்பிடலாம்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் நகரங்களில் உங்களுக்கு எந்தளவு இறைச்சியைத் தந்து ஆசீர்வதித்திருக்கிறாரோ அந்தளவு அதைச் சாப்பிடலாம். தீட்டுள்ளவரும் சரி, தீட்டில்லாதவரும் சரி, மான் இறைச்சியை சாப்பிடுவதுபோல் அதையும் சாப்பிடலாம்.