27 அங்கே உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பலிபீடத்தில் இறைச்சியையும் இரத்தத்தையும்+ தகன பலியாகச் செலுத்த வேண்டும். நீங்கள் செலுத்துகிற பலிகளின் இரத்தத்தை உங்கள் கடவுளாகிய யெகோவாவுடைய பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும்.+ ஆனால், இறைச்சியை நீங்கள் சாப்பிடலாம்.