15 அதனால், உங்கள் பரிசுத்த வீடாகிய பரலோகத்திலிருந்து உங்கள் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களைப் பார்த்து அவர்களை ஆசீர்வதியுங்கள். எங்கள் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே+ நீங்கள் எங்களுக்குத் தந்த தேசமாகிய பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை+ ஆசீர்வதியுங்கள்’+ என்று சொல்ல வேண்டும்.