45 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்காமலும் அவருடைய கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கடைப்பிடிக்காமலும் போனால்,+ இந்த எல்லா சாபங்களும்+ கண்டிப்பாக உங்கள்மேல் வந்து குவியும். நீங்கள் அழியும்வரை+ அவை உங்களைப் பின்தொடரும், உங்களைவிட்டுப் போகவே போகாது.