13 நீ எழுந்து ஜனங்களைப் புனிதப்படுத்து!+ நீ அவர்களிடம், ‘நாளைக்காக உங்களைப் புனிதப்படுத்திக்கொள்ளுங்கள். இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது என்னவென்றால், “இஸ்ரவேலர்களே, அழிக்க வேண்டிய பொருள்கள் உங்களிடம் இருக்கின்றன. அவற்றை நீங்கள் ஒழித்துக்கட்டும்வரை எதிரிகளை உங்களால் ஜெயிக்க முடியாது.