16 அதற்கு யோசேப்பின் வம்சத்தார், “மலைப்பகுதி எங்களுக்குப் போதுமானதாக இல்லைதான். ஆனால், பெத்-செயானிலும்+ அதன் சிற்றூர்களிலும் யெஸ்ரயேல்+ பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற கானானியர்கள் எல்லாரும் இரும்பு அரிவாள்கள் பொருத்தப்பட்ட போர் ரதங்களை+ வைத்திருக்கிறார்களே” என்று சொன்னார்கள்.