17 எங்கள் கடவுளாகிய யெகோவாதான் எங்களையும் எங்கள் முன்னோர்களையும் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்தார்,+ எங்கள் கண் முன்னால் மாபெரும் அற்புதங்களைச் செய்தார்,+ நடந்துவந்த வழி முழுவதும் எங்களைப் பாதுகாத்தார், கடந்துவந்த எல்லா தேசத்து ஜனங்களின் கையிலிருந்தும் காப்பாற்றினார்.+