15 பின்பு, யெகோவாவிடம் உதவிக்காகக் கதறினார்கள்.+ அப்போது, அவர்களைக் காப்பாற்ற+ பென்யமீன் கோத்திரத்தைச்+ சேர்ந்த கேராவின் மகன் ஏகூத்தை+ யெகோவா அனுப்பினார். இவர் இடது கை பழக்கமுள்ளவர்.+ மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் கப்பம் கட்டிவிட்டு வரச் சொல்லி இஸ்ரவேலர்கள் இவரை அனுப்பி வைத்தார்கள்.