13 அம்மோனியர்களின் ராஜா யெப்தாவின் தூதுவர்களிடம், “இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அர்னோனிலிருந்து+ யாபோக் வரையும் யோர்தான் வரையும்+ இருக்கிற என்னுடைய தேசத்தைப் பிடுங்கிக்கொண்டார்கள்.+ அதனால்தான் தாக்க வந்தோம். இப்போது, சமாதானமாக அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று சொன்னான்.