8 அதோடு, ஆள் அனுப்பி பெலிஸ்தியர்களின் தலைவர்கள் எல்லாரையும் வரவழைத்து, “இஸ்ரவேலின் கடவுளுடைய பெட்டியை என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இஸ்ரவேலின் கடவுளுடைய பெட்டியை காத் நகரத்துக்குக்+ கொண்டுபோங்கள்” என்று சொன்னார்கள். அதன்படியே, அந்தப் பெட்டியை அங்கே கொண்டுபோனார்கள்.