21 “அவன் கதையை முடிக்க இதுதான் நல்ல சந்தர்ப்பம்; அவளை அவனுக்குக் கல்யாணம் செய்துகொடுப்பதாகச் சொல்லி பெலிஸ்தியர்களின் கையில் சிக்க வைத்துவிடுகிறேன்”+ என்று தன் மனதில் சொல்லிக்கொண்டார். பின்பு தாவீதிடம் இரண்டாவது தடவையாக, “நீ என் மகளைக் கல்யாணம் செய்துகொள், இன்று நாம் சம்பந்தம் பண்ணலாம்” என்றார்.