25 பின்பு, சவுல் தன்னுடைய ஆட்களோடு தாவீதைத் தேடி அங்கே வந்தார்.+ அதை தாவீது கேள்விப்பட்டவுடன் மாகோன் வனாந்தரத்தில் இருக்கிற மலைப்பாறைக்குப்+ போய்ப் பதுங்கிக்கொண்டார். அதை சவுல் தெரிந்துகொண்டவுடன், தாவீதைத் துரத்திக்கொண்டு மாகோன் வனாந்தரத்துக்குப் போனார்.