21 அதற்கு சவுல், “தாவீதே, என் மகனே, நான் பாவம் செய்துவிட்டேன்.+ இனி நான் உனக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டேன். ஏனென்றால், இன்றைக்கு நீ என்னுடைய உயிருக்கு மதிப்புக் காட்டினாய்.+ நான்தான் முட்டாள்தனமாக நடந்துகொண்டேன், பெரிய தப்பு செய்துவிட்டேன்” என்றார்.