8 பின்பு, இஸ்போசேத்தின்+ தலையை எப்ரோனில் இருந்த தாவீது ராஜாவிடம் கொண்டுவந்து, “எஜமானே, இதோ, உங்களைக் கொல்லத் துடித்த+ உங்கள் எதிரியாகிய சவுலின்+ மகன் இஸ்போசேத்தின் தலை! ராஜாவாகிய உங்களுக்காக சவுலையும் அவருடைய வம்சத்தாரையும் யெகோவா இன்றைக்குப் பழிவாங்கியிருக்கிறார்” என்று சொன்னார்கள்.