17 அப்போது தாவீது, “யெகோவாவே, இப்படிச் செய்வதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது! எனக்காக உயிரையே பணயம் வைத்துப் போன என் வீரர்களின் இரத்தத்தை நான் குடிக்க வேண்டுமா?”+ என்றார். இப்படி, அந்தத் தண்ணீரைக் குடிக்க மறுத்துவிட்டார். இவையே அந்த மூன்று மாவீரர்கள் செய்த செயல்கள்.