5 இதற்கிடையே, தாவீதின் மனைவியான ஆகீத் பெற்றெடுத்த அதோனியா,+ “அடுத்த ராஜா நான்தான்!” என்று சொல்லிக்கொண்டான்; இப்படி, தன்னை ஒரு பெரிய ஆளாகக் காட்டிக்கொண்டான். ஒரு ரதத்தை ஏற்பாடு செய்து, அந்த ரதத்தோடு சேர்ந்து வருவதற்கு குதிரைவீரர்களையும், அதன் முன்னால் ஓடுவதற்கு 50 ஆட்களையும் வைத்துக்கொண்டான்.+