14 அவர் நப்தலி கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு விதவையின் மகன்; அவருடைய அப்பா தீருவைச் சேர்ந்த செம்பு ஆசாரி.+ எல்லாவித செம்பு வேலைகளையும் செய்வதில் மிகுந்த அறிவும் அனுபவமும் திறமையும் ஈராமுக்கு இருந்தது.+ அதனால், சாலொமோன் ராஜாவிடம் வந்து அவர் செய்யச் சொன்ன எல்லா வேலைகளையும் செய்து கொடுத்தார்.