25 அந்தத் தொட்டி 12 காளை உருவங்களுக்கு மேலே வைக்கப்பட்டிருந்தது.+ 3 காளைகள் வடக்கேயும் 3 காளைகள் மேற்கேயும் 3 காளைகள் தெற்கேயும் 3 காளைகள் கிழக்கேயும் பார்த்தவாறு நின்றன. அந்தக் காளைகள்மேல் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் காளைகளின் பின்புறங்கள் தொட்டியின் மையப்பகுதியை நோக்கி இருந்தன.