4 வனாந்தரத்தில் ஒருநாள் முழுவதும் நடந்துபோனார்; ஒரு புதர்ச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாக வேண்டுமென்று கடவுளிடம் வேண்டினார். “போதும், யெகோவாவே! என் உயிரை எடுத்துவிடுங்கள்.+ செத்துப்போன என் முன்னோர்களைவிட நான் எந்த விதத்திலும் மேலானவன் அல்ல” என்று வேண்டினார்.