13 பின்பு, யெகோவாவின் ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனையிலும் இருந்த எல்லா பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டான்.+ யெகோவாவின் ஆலயத்தில் இஸ்ரவேலின் ராஜாவான சாலொமோன் செய்து வைத்திருந்த தங்கச் சாமான்கள்+ எல்லாவற்றையும் நொறுக்கிப்போட்டான். யெகோவா சொன்னபடியே இது நடந்தது.