-
2 ராஜாக்கள் 10:15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 யெகூ அங்கிருந்து போய்க்கொண்டிருந்தபோது, தன்னைச் சந்திக்க வந்த ரேகாபின்+ மகன் யோனதாபைப்+ பார்த்தார். யோனதாப் அவருக்கு வாழ்த்துச் சொன்னார். அப்போது யெகூ, “என் இதயம் உன் இதயத்துக்கு உண்மையாக இருப்பதுபோல், உன் இதயம் எனக்கு உண்மையாக இருக்கிறதா?” என்று கேட்டார்.
அதற்கு யோனதாப், “ஆமாம்” என்று சொன்னார்.
“அப்படியானால், கையைக் கொடு” என்று யெகூ சொன்னார்.
உடனே யோனதாப் தன்னுடைய கையைக் கொடுத்தார், யெகூ அவரைப் பிடித்து தன்னுடைய ரதத்தில் ஏற்றிக்கொண்டார்.
-