23 பின்பு, யெகூவும் ரேகாபின் மகன் யோனதாபும்+ பாகால் கோயிலுக்குள் போனார்கள். அப்போது யெகூ அங்கிருந்த பாகால் பக்தர்களிடம், “நன்றாகத் தேடிப் பாருங்கள், யெகோவாவை வணங்குகிறவர்கள் யாரும் இங்கே இருக்கக் கூடாது. பாகாலின் பக்தர்கள் மட்டும்தான் இங்கே இருக்க வேண்டும்” என்று சொன்னார்.