11 அதனால் தாவீது பாகால்-பிராசீமுக்குப்+ போய், பெலிஸ்தியர்களை வெட்டி வீழ்த்தினார். அப்போது, “சீறிப்பாயும் வெள்ளம்போல் உண்மைக் கடவுள் என் எதிரிகளை அழித்துப்போட்டார், என் மூலம் இதைச் செய்தார்” என்று சொன்னார். அதனால், அந்த இடத்துக்கு பாகால்-பிராசீம் என்று பெயர் வைத்தார்கள்.