23 யோவாகாசின் பேரனும் யோவாசின் மகனும் யூதாவின் ராஜாவுமாகிய அமத்சியாவை இஸ்ரவேலின் ராஜா யோவாஸ் பெத்-ஷிமேசில் பிடித்தார். பின்பு, அவரை எருசலேமுக்குக் கொண்டுவந்தார். எருசலேம் மதில் சுவரை ‘எப்பிராயீம் நுழைவாசல்’+ தொடங்கி ‘மூலை நுழைவாசல்’+ வரை 400 முழ நீளத்துக்கு யோவாஸ் இடித்துப்போட்டார்.