6 அவர் பெலிஸ்தியர்களை எதிர்த்துப் போர் செய்யப் போனார்.+ அவர்களோடு போர் செய்து, காத் நகரத்தின் மதிலையும்,+ யப்னே நகரத்தின் மதிலையும்+ அஸ்தோத் நகரத்தின் மதிலையும் உடைத்தார்.+ பின்பு, அஸ்தோத்துக்குப் பக்கத்திலும் பெலிஸ்தியர்களின் பகுதியிலும் நகரங்களைக் கட்டினார்.