23 உசியா இறந்த பிறகு அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவர் ஒரு தொழுநோயாளி என்பதால் ராஜாக்களை அடக்கம் செய்கிற இடத்துக்கு வெளியே இருந்த நிலத்தில் அவரை அடக்கம் செய்தார்கள். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் யோதாம் ராஜாவானார்.+