5 எசேக்கியா மன உறுதியோடு செயல்பட்டார். இடிந்து கிடந்த மதில் முழுவதையும் திரும்பக் கட்டினார், அதன்மேல் கோபுரங்களைக் கட்டினார். அந்த மதிலுக்கு வெளியே இன்னொரு மதிலையும் கட்டினார். ‘தாவீதின் நகரத்தில்’ இருந்த மில்லோவையும்+ பழுதுபார்த்தார். ஏராளமான ஆயுதங்களையும் கேடயங்களையும் செய்தார்.