14 மக்கள் மட்டுமல்ல, முக்கியமான குருமார்கள் எல்லாரும்கூட மற்ற தேசத்து மக்கள் செய்துவந்த அருவருப்பான எல்லா காரியங்களையும் செய்தார்கள். கடவுளுக்கு உண்மையாக இல்லாமல் படுமோசமாக நடந்துகொண்டார்கள்; யெகோவா புனிதப்படுத்திய எருசலேம் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.+