10 யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டபோது,+ குருமார்கள் தங்களுக்குரிய உடையில் எக்காளங்களோடும்,+ லேவியர்களான ஆசாபின் வம்சத்தார் ஜால்ராக்களோடும் எழுந்து நின்று யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள்; இஸ்ரவேல் ராஜா தாவீது கட்டளை கொடுத்திருந்தபடியே+ அப்படிச் செய்தார்கள்.