17 கசிப்பியா என்ற இடத்திலிருந்த இத்தோ என்ற தலைவரைப் போய்ப் பார்க்கும்படி நான் அவர்களுக்குக் கட்டளை கொடுத்தேன். எங்கள் கடவுளுடைய ஆலயத்தில் சேவை செய்ய ஊழியர்களை அனுப்பி வைக்கும்படி இத்தோவிடமும் கசிப்பியாவில் ஆலயப் பணியாளர்களாக இருந்த அவருடைய சகோதரர்களிடமும் சொல்லச் சொன்னேன்.