27 ஜனங்கள் எருசலேம் மதில்களின் அர்ப்பண விழாவைச் சந்தோஷமாகக் கொண்டாட நினைத்தார்கள். அதனால், ஜால்ராக்களோடும் யாழ்களோடும் மற்ற நரம்பிசைக் கருவிகளோடும் நன்றிப் பாடல்கள்+ பாடுவதற்காக லேவியர்களை எல்லா இடங்களிலிருந்தும் தேடிக் கண்டுபிடித்து எருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்கள்.