26 பின்பு, “மற்ற தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்ததால்தானே இஸ்ரவேலின் ராஜாவான சாலொமோன் பாவம் செய்தார்? அவரைப் போல ஒரு ராஜா வேறு எங்குமே இருந்ததில்லை.+ அவரைக் கடவுள் நேசித்ததால்தான்+ இஸ்ரவேல் தேசம் முழுவதற்கும் ராஜாவாக்கினார். அப்படிப்பட்டவரையே மற்ற தேசத்துப் பெண்கள் பாவம் செய்ய வைத்துவிட்டார்கள்.+