17 ராஜாவின் ஆணையும் சட்டமும் போய்ச் சேர்ந்த எல்லா மாகாணங்களிலும் நகரங்களிலும் இருந்த யூதர்கள் சந்தோஷத்தோடும் குதூகலத்தோடும் விருந்துகளையும் கொண்டாட்டங்களையும் நடத்தினார்கள். அவர்களை நினைத்து மற்ற ஜனங்கள் மிகவும் பயந்தார்கள். அதனால், அவர்களில் நிறைய பேர் யூத மதத்துக்கு மாறினார்கள்.+