3 யூதரான மொர்தெகாய் அகாஸ்வேரு ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்தார். அவர் யூதர்களுடைய அபிமானத்தைப் பெற்றார், தன் சகோதரர்களுடைய மதிப்பு மரியாதையைச் சம்பாதித்தார். அதோடு, தன் ஜனங்களும் அவர்களுடைய பிள்ளைகள் எல்லாரும் நல்லபடியாக வாழ்வதற்குப் பாடுபட்டார்.