9 அதனால், இதையெல்லாம் ஆழமாக யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தேன்: நீதிமான்களும் ஞானமுள்ளவர்களும் உண்மைக் கடவுளுடைய கையில் இருக்கிறார்கள். அவர்களுடைய செயல்களும் அவருடைய கையில்தான் இருக்கின்றன.+ தங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் காட்டிய அன்பையும் வெறுப்பையும் பற்றி மனுஷர்களுக்குத் தெரியாது.