13 அதோடு, “தேசத்தில் பத்திலொரு பாகம் மட்டும் மீதியாக இருக்கும். அதுவும் நெருப்பில் சுட்டெரிக்கப்படும். ஒரு பெரிய மரமோ கருவாலி மரமோ வெட்டிச் சாய்க்கப்பட்ட பின்பு அடிமரம் மட்டும் மீந்திருப்பது போல அது இருக்கும். அதன் அடிமரத்திலிருந்து பரிசுத்தமான ஒரு தளிர் துளிர்க்கும்” என்று சொன்னார்.