30 “‘எசேக்கியா, உனக்கு நான் தரும் அடையாளம் இதுதான்: இந்த வருஷம் தானாக விளைந்ததை சாப்பிடுவீர்கள். அடுத்த வருஷம் அதிலிருந்து முளைக்கிற பயிர்களைச் சாப்பிடுவீர்கள். ஆனால், அதற்கடுத்த வருஷம் நீங்களே விதைத்து அறுவடை செய்வீர்கள், திராட்சைத் தோட்டங்களை அமைத்து அவற்றின் பழங்களைச் சாப்பிடுவீர்கள்.+