3 யோசியாவின் மகன் யோயாக்கீம்+ யூதாவை ஆட்சி செய்த காலத்திலும் அவரிடமிருந்து எனக்குச் செய்தி கிடைத்தது. யூதாவின் ராஜாவும் யோசியாவின் மகனுமான சிதேக்கியாவின்+ 11-ஆம் வருஷத்தின் முடிவு வரையிலும், எருசலேம் ஜனங்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போன ஐந்தாம் மாதம் வரையிலும்+ அவரிடமிருந்து எனக்குச் செய்தி கிடைத்தது.