6 பஸ்கூரே, நீயும் உன் வீட்டில் இருக்கிற எல்லாரும் பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டுபோகப்படுவீர்கள். நீ அங்கே போய் செத்துப்போவாய். உன்னுடைய எல்லா நண்பர்களோடும் சேர்த்து அங்கே புதைக்கப்படுவாய். ஏனென்றால், நீ அவர்களிடம் பொய்த் தீர்க்கதரிசனங்களைச் சொன்னாய்’”+ என்றார்.