4 ‘இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: “உன்னை மதிலுக்கு வெளியே சுற்றிவளைத்திருக்கும் பாபிலோன் ராஜாவையும்+ கல்தேயர்களையும் தாக்குவதற்காக நீ கையில் வைத்திருக்கிற ஆயுதங்களை நான் உனக்கு எதிராகவே திருப்புவேன். அவற்றை இந்த நகரத்தின் நடுவே கொண்டுவருவேன்.